செயற்கைக் கோள் ஏவுதல் நாமக்கல் மாவட்டத்தை பிரதிநிதி த்துவப்படுத்திய ஒரே மாணவர்

செயற்கைக் கோள் ஏவுதல் நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே மாணவருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2025-08-02 09:30 GMT
குமாரபாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பில் பயிலும் பரத்குமார், என்ற மாணவர்,. இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நடைபெற்ற நிசார் செயற்கைக் கோள் ஏவுதல் நிகழ்வில் நாமக்கல் மாவட்ட அளவில் தேர்வாகி பங்கேற்று வந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பு கோவை தனியார் பொறியியல் கல்லூரி நடத்திய ஆன்லைன் வினாடி வினா போட்டியின் மூலம் கிடைத்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், பரத்குமார் வெற்றி பெற்றார். அதன் பரிசாக, அவரை இஸ்ரோவின் அழைப்பின் பேரில் நேரடியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்து சென்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் என்ற சிறப்புடன் பரத்குமார் கலந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்தார். இதே போல், கடந்த வருடம் நடைபெற்ற செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வில், இதே பள்ளியில் பயன்ற பத்ரி என்ற மாணவன் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.இவர்கள் நாடு எதிர்பார்க்கும் அறிவியல் நிபுணர்களில் ஒருவராக வளர்வார்கள் என்பதில் ஐயமில்லை. மாணவர் பரத்குமாரை பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

Similar News