பால்குடம் ஊரும் நிகழ்ச்சி நடைபெற்றது
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது;
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தமிழக உரிமை மீட்பு எழுச்சி பயணம் வெற்றி அடையவும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என பள்ளிபாளையம் ஒன்றியம் மற்றும் நகரத்தின் சார்பாக, கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது . இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.டி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் . சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் சுதாகர் ,மாவட்ட தலைவர் மூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவர் அணி தலைவர் வேல்முருகன் வருகை புரிந்தனர். மாவட்ட வன்னியர் சங்க துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சிவன் டெக்ஸ் குமார், மாவட்ட துணை தலைவர் மூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கோடீஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் விமல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரதீப் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், நகர கொள்கை விளக்க அணி செயலாளர் மணி, மற்றும் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது . அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.