பெரம்பலூர் அரியலூர் மானாமதுரை சாலையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பெரம்பலூர் நான்கு வழிச்சாலை முதல் அரியலூர் வரை உள்ள பிரதான சாலையானது முழுவதும் அளவுக்கதிகமான கனரக வாகனங்கள் சென்று சேதமடைந்து குண்டும், குழியுமாக ஒரு இருசக்கர வாகனம் செல்வதற்கு கூட தகுதி இல்லாத மற்றும் பாதுகாப்பில்லாத சாலையாக அபாயகரமான நிலையில் உள்ளது.;

Update: 2025-08-04 10:00 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு : கடந்த 2016-ஆம் ஆண்டு பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH226 Extn)சுமார் 66-கி. மீ நீளமுள்ள சாலைப்பணி சுமார் 157- கோடியில் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.இந்நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தால் (NH136) மாற்றப்பட்டது.தற்போது பெரம்பலூர் நான்கு வழிச்சாலை முதல் அரியலூர் வரை உள்ள பிரதான சாலையானது முழுவதும் அளவுக்கதிகமான கனரக வாகனங்கள் சென்று சேதமடைந்து குண்டும், குழியுமாக ஒரு இருசக்கர வாகனம் செல்வதற்கு கூட தகுதி இல்லாத மற்றும் பாதுகாப்பில்லாத சாலையாக அபாயகரமான நிலையில் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை இதனை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத்தர வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (04.08.2025) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அக்கட்சியின் பெரம்பலூர் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். கீர்த்திவாசன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜான்சிராணி, குன்னம் மண்டலச் செயலாளர் ராஜோக்கியம், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கலைராஜா, பெரம்பலூர் தொகுதி மாநில தகவல்தொழில்நுட்பப் பாசறை துணைச்செயலாளர் சத்தியசீலன் குன்னம் தொகுதி தகவல்தொழில்நுட்பப் பாசறை துணைச்செயலாளர் அருண்குமார் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களான இராமர்,சரவணன், சிவநேசன், அஜீத், தனசேகர் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News