குமாரபாளையம் அருகே உள்ள வினோபாஜி நகரில் காணாமல் போன நான்கு வயது குழந்தை மீட்பு குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் குறி
வினோபாஜி நகரில் காணாமல் போன நான்கு வயது குழந்தை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மீட்பு குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் குறித்து தேவூர் போலீசார் விசாரணை.;
குமாரபாளையம் அருகே உள்ள புள்ளா கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி நகர் பகுதியில் வசிப்பவர்கள் ராஜா, மீனா தம்பதியினர் இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது இதில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை நான்கு வயது கொண்ட கௌசிகா அருகிலுள்ள குழந்தைகள் நல மையப்பள்ளிக்கு தினசரி காலை 9 மணிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை மூன்று மணிக்கு வீடு திரும்பும் போது வழக்கம் இதுபோல் கடந்த 30ஆம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற குழந்தை மீண்டும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த ராஜாவின் தாயார் அருகில் உள்ள வீடுகளிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குழந்தைகள் நல மைய பள்ளி பொறுப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது இன்று குழந்தை பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து பல்வேறு பகுதிகளிலும் தேடியும் குழந்தை கிடைக்காத ராஜா மீனா தம்பதியினர் தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோப்ப நாய் உதவிடும் மற்றும் 25க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டும் வினோபாஜி நகர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டும் குழந்தை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் போலீசார் குழந்தையை கடத்திச் சென்றிருக்க கூடும் என்ற நிலையில் தொடர்ந்து விசாரணையை நான்கு தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர் இதில் குழந்தையை கடத்திய நபர் தான் சிக்கிக் கொள்வோம் என அஞ்சு இன்று மாலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் குழந்தையை இறக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டார் அதனால் அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர் இதனை அடுத்து வினோபாஜி நகரில் காணாமல் போன குழந்தை ஜான் என குமாரபாளையம் போலீசார் உறுதி செய்ததும் தேவூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் இந்த தகவலின் அடிப்படையில் தேவர் போலீசார் பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குழந்தையை ஒப்படைத்தனர் பின்னர் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர் யார் அந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வினோபாஜி நகரில் காணாமல் போன குழந்தை நான்கு நாட்களுக்குப் பிறகு கிடைத்தது பெற்றோருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் வினோபாஜி நகர் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் உள்ளதா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்