ஆடி மாத விசேஷ வழிபாடு நடைபெற்றது
ஆடி மாத விசேஷத்தனத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் கார்கூடல் பட்டி கிராமம் ராஜபாளையத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவிலில் , ஆடி மாத விசேச தினத்தையொட்டி, வளையல் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு வளையல்கள் வழங்கினர்.நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகிகள் ஏழு வகையான உணவுகளை பொதுமக்களுக்கு பரிமாறினர் . நிகழ்ச்சியில் கோயில் தர்மகர்த்தா சரவணன் (எ)கே உமா சங்கர், செம்மலை, முருகேசன் ,அன்பழகன், கோகிலா, ரத்தினம், ஹரி ,கௌஷிக் ,கவின், மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து கோவிலில் பல்வேறு விசேஷ நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.