மாபெரும் கபடி போட்டி திருவிழா

விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் அத்த பானுமதி நினைவு நாளை முன்னிட்டு கபடி போட்டு திருவிழா இப் போட்டியில் இருவருக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் பங்கேற்பு;

Update: 2025-08-04 19:58 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னாறு கிராமத்தில் பானுமதி டீ ஸ்டால் மற்றும்அமைச்சர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களின் அக்கா பானுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி திருவிழா நடைபெற்று வருகிறது போட்டியை உயர் நீதிமன்ற மதுரை அரசு கூடுதல் வழக்கறிஞர் மாலதி, தலைமை வழக்கறிஞர் திருக்குமரன், திருமாந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா ஆகியோர் இப் போட்டியினை துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் இப்போோட்டி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் நாமக்கல் காரைக்கால் அரியலூர் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் கடலூர் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் தங்கள் அணியை பதிவு செய்து விளையாடி வருகின்றனர் இதில் வெற்றி பெறும் விளையாட்டு அணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்க உள்ளார்.

Similar News