திருமங்கலம் அருகே ரயில் மோதி பெண் பலி.
மதுரை திருமங்கலம் ரயில்வே கேட் அருகே ரயில் மோதி பெண் பலியான சம்பவம் நடந்துள்ளது.;
விருதுநகரில் இருந்து மதுரைக்கு சென்ற சரக்கு ரயிலுக்காக திருமங்கலம் பாண்டியன் நகர் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது காலை 11 மணிக்கு ரயில் வந்தபோது, அதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது ரயில் மோதியது. சம்பவ இடத்திலேயே பலியானார் .அவரது உடல் சுமார் 300 அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.