முன்னாள் ராணுவ வீரரின் டூவீலரை எரித்தவர் கைது.
மதுரை அருகே முன்னாள் ராணுவ வீரரின் டூவீலரை எரித்தவர் கைது செய்யப்பட்டார்;
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வமாணிக்கம் (50)என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் இல்ல விழா ஆக.10ல் நடக்கவுள்ளது .அதற்கான பத்திரிக்கைகளை நேற்று (ஆக.6) காலை அலங்காநல்லுார் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு வழங்கினார். மாலையில் இருசக்கர வாகனத்தில் பெரியஊர்சேரியில் இருந்து வெள்ளையம்பட்டிக்கு சென்றார். ஆதனுார் காலனி அருகே போதையில் சிலர் செல்வமாணிக்கத்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர் அங்கிருந்து தப்பினார். போதை இளைஞர்கள் செல்வமாணிக்கத்தின் டூவீலரை பெட்ரோலை ஊற்றி எரித்தனர். இது தொடர்பாக அலங்காநல்லுார் போலீசார் அதேபகுதி ரவி மகன் வினோத்தை (26) கைது செய்தனர். தப்பிய பாரதிராஜா மகன் கலை அமுதனை போலீசார் தேடி வருகின்றனர்.