அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா நடந்தது.;

Update: 2025-08-07 13:26 GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை துவக்க விழா முதல்வர் மற்றும் பேரவைத்தலைவர் சரவணாதேவி தலைமையில் நடந்தது. கணினி அறிவியல் துறைத்தலைவர் மற்றும் பேரவை துணைத்தலைவர் கார்த்திகேயனி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அந்தியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நிர்மலாதேவி பங்கேற்று, மாணவர் பேரவை உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வாழ்த்தி பேசினார். இலக்கினை நோக்கி என்னும் தலைப்பில், மாணவர்கள் எவ்வாறு இலக்கினை நோக்கி பயணிப்பது என்பதற்கு 80/20 என்ற கோட்பாட்டையும், இரண்டு நிமிட செயலாக்கத்தையும் பற்றி எடுத்துரைத்தார். மாணவர்கள் சமுகவலைத்தளங்களில் செலவிடும் நேரங்களை குறைத்து கொள்ள அறிவுறுத்தினார். அனைத்து துறைத்தலைவர்களும் மாணவர் பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவர் பேரவை தலைவர் மூன்றாமாண்டு கணினி அறிவியல் பயிலும் கல்பனா நன்றி கூறினார்.

Similar News