முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி மலரஞ்சலி

குமாரபாளையம் வடக்கு நகர மற்றும் தெற்கு நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி மலரஞ்சலி செலுத்தப்பட்டது;

Update: 2025-08-07 15:19 GMT
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் நகர தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் மற்றும் வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் தலைமையில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. . நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னாள் நகர செயலாளர் ஜெயபிரகாஷ், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜ்குமார், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர். குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் நகர செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News