பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தின விழா
மருத்துவம்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தர்ஷனா மருத்துவமனையில், லயன்ஸ் சங்கம் சார்பில், தேசிய எலும்பு மற்றும் மூட்டு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் கே.கே.டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் துரை. நீலகண்டன் கலந்து கொண்டு, எலும்பு மற்றும் மூட்டு நலன் குறித்தும், முதியோர்களுக்கான பாதுகாப்பான வாழ்வியல் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இதில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் இ.வீ.காந்தி, வி.எம்.தமிழ்செல்வன், வைரவன், ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் லயன்ஸ் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக லயன்ஸ் சங்க செயலாளர் வீ.மனோகரன் வரவேற்றார். நிறைவாக, பொருளாளர் ஜி.ராஜா நன்றி கூறினார். நிகழ்வில், பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில், எலும்பு நலனுக்கு தகுந்த சத்துணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.