அரசு கலைக் கல்லூரியில் இன்றும், நாளை மறுநாளும் மாணவர் சேர்க்கை
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றும், நாளை மறுநாளும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றும், நாளை மறுநாளும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10.00 மணிக்கு முதுநிலை மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும், பொது கலந்தாய்வு ஆக.13, காலை 09:30 மணிக்கும் நடைபெற உள்ளது. இங்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்கள் உரிய சான்றிதழ்களான 1.இளநிலை பட்ட சான்று 2.தற்காலிகச் சான்று 3.ஆறு பருவங்களுக்கான மதிப்பெண் சான்று 4 ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்று 5.சாதி சான்றிதழ் 6.வருமானச் சான்றிதழ் 7.ஆதார் அட்டை அசல் மற்றும் ஒவ்வொரு சான்றிதழிலும் நான்கு நகல்கள் 8.பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஐந்து, 9. சிறப்பு ஒதுக்கிட்டு ஆணை, மாற்றுத்திறனாளி முன்னாள் ராணுவத்தினர் விளையாட்டு என்.சி.சி. போன்ற தங்களுக்குரிய சான்றிதழ் 10. இவற்றுடன் சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் பெற்றோர்களுடன் கல்லூரிக்கு ஆக.13, காலை 09:30 மணிக்குள் வருகை தந்து சேர்க்கை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்கல்லூரியில் முதுநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் முதல்நிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகின்றது. மேலும் இளநிலை பட்டப்படிப்புகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல் பட்டப்படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பித்த அல்லது விண்ணப்பிக்காமல் இக்கல்லூரியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ மாணவிகள் உடனடியாக கல்லூரிக்கு நேரில் வந்து, சேர்க்கைக் குழுவினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலியிடம் இருப்பதால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர விரும்பும் அனைத்து மாணவ மாணவிகளும் உடனடியாக கல்லூரிக்கு வருகை தந்து சேர்க்கை பெற கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.