தஞ்சையில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி

ஆசிரியர்கள் பயிற்சி;

Update: 2025-08-10 15:48 GMT
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், தஞ்சை மாவட்ட அமைப்பின் சார்பில், குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி தஞ்சை சரபோஜி கல்லூரி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் க.ராணி தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட. முதன்மை கல்வி அலுவலர். இ.மாதவன் பயிற்சியை. துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் லெ.முருகன் வரவேற்றார்.  மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஞானசேகர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பாலச்சந்திரன், எம்.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநிலச் செயலாளர்கள்  எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், அறிவியல் இயக்கம் பற்றியும், எம்.தியாகராஜன் குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றியும் விளக்க உரையாற்றினர்.  முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வ.சஞ்சய் (மேல்நிலைப்பள்ளி) வாழ்த்திப் பேசினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எஸ்.முத்தமிழ்செல்வி, பள்ளித் துணை ஆய்வாளர். சு.மாதவன், அறிவியல் இயக்கம் மாவட்டப் பொருளாளர் வி.ராஜசேகர். ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஆய்வுகள் செய்யும் விதம் பற்றி விளக்கி பேசினர்.  முனைவர்  பி.இராம்மனோகர், முனைவர் பேராசிரியர் மாரியப்பன், முனைவர் கமலா, வி.நாராயணசாமி, ஆர்.கண்ணன் ஆகியோர் நீடித்த பாதுகாப்பான நீர்மேலாண்மை என்னும் தலைப்பில் ஆய்வுகள் செய்யும் முறை பற்றி கருத்துரையாற்றினர். மாவட்டத் துணைத் தலைவர் வி.முருகானந்தம் நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் கே.கே.தியாகராஜன், பி.மஞ்சுளா, ஏ.அருணா தேவி, டி.ரவிச்சந்திரன், எஸ்.கே.செந்தில்குமார், கே.தவச்செல்வன், எஸ்.சுதாகர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Similar News