விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது விடிவி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக வீடு வீடாக காவல்துறையினர் அதிரடி
விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது விடிவி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக வீடு வீடாக காவல்துறையினர் அதிரடி சோதனை....;
சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது விடிவி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக வீடு வீடாக காவல்துறையினர் அதிரடி சோதனை.... சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் கிராமத்தில் பொண்ணுபாண்டி என்பவரது வீட்டில் வைத்து சட்ட விரோதமாக நேற்று பட்டாசு தயாரித்த போது முத்துலட்சுமி, சண்முகத்தாய், ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் உரிமையாளர் பொன்னுபாண்டி கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி., கண்ணன் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கிராம மக்களிடையே எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் எஸ்.பி., கண்ணன் உத்தரவின் பேரில் இன்று காலை விஜய கரிசல்குளம் கிராமத்தில் சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 10 குழுக்கள் வீடு வீடாகச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டது. ஆய்வின்போது 5 வீடுகளில் சட்டவிரோதமாக தயாரித்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.