மத்திய லயன்ஸ் சங்கத்தாரின் ரத்த தானம், இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையத்தில் மத்திய லயன்ஸ் சங்கத்தாரின் சார்பில் ரத்த தானம், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;
குமாரபாளையத்தில் மத்திய லயன்ஸ் சங்கம், மத்திய இளம் லயன்ஸ் சங்கம், குமாரபாளையம் மத்திய லயன்ஸ் ஐ கேர் அமைப்பு, ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கி சார்பில் ரத்த தானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. மருத்துவ குழுவினர் பங்கேற்று, முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். இதில் 127 நபர்கள் பங்கேற்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரத்ததான முகாமில் 35 நபர்கள் ரத்தம் வழங்கினர். மாவட்ட அமைச்சரவை செயலர் ரமேஷ், மண்டல தலைவர் ராமலிங்கம், வட்டார தலைவர் கணேசன், ரத்த தான முகாம் தலைவர் வெங்கடாசலம், டாக்டர்கள் சந்திரசேகரன், ராமசந்திரன், செயலர்கள் ஜெயபால், ரமேஷ், பொருளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.