போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டவர்கள் தாசில்தார் மீது புகார்

குமாரபாளையத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் தாசில்தார் மீது புகார் கூறியுள்ளனர்.;

Update: 2025-08-11 15:22 GMT
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேமன்காட்டுவலசு பகுதியில் வெள்ளக்கவுண்டர், சின்னநாச்சி கவுண்டர், கந்தப்ப கவுண்டர், கருப்பண்ணன், குருநாத கவுண்டர் உள்ளிட்ட 10 நபர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் குறிப்பிட்ட நிலத்தை அப்பகுதியில் பொதுநல அமைப்பு நடத்தை வரும் நபர், தாசில்தாரிடம் போலி ஆவணம் பெற்று கிரயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மற்ற நபர்கள் மாவட்ட கலெக்டர்n வசம் புகார் மனு கொடுத்து உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபரான மோகனசுந்தரம் கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான நிலத்தை தாசில்தார் சிவக்குமார் வசம் போலி ஆவணம் பெற்று பொதுநல அமைப்பை நடத்தி வரும் ஒரு நபர் கிரயம் செய்துள்ளார். இது குறித்து தாசில்தார் வசம் கேட்டால், வி.ஏ.ஓ. மற்றும் ஆர்.ஐ. கொடுத்த அறிக்கையின் படி நான் ஆவணம் கொடுத்தேன், என்று மழுப்புகிறார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் கேட்டால், தாசில்தார் கொடுத்த ஆவணம் படிதான் கிரயம் செய்யபட்டுள்ளது, என்று கூறுகிறார்கள். இதில் சம்பந்தபட்ட அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுநல அமைப்பின் பெயரில் மோசடி செயல்கள் செய்து வருவதால், சம்பந்தப்பட்ட பொதுநல அமைப்பை தடை செய்ய வேண்டும். தாசில்தார் சிவக்குமார் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News