தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது

தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது;

Update: 2025-08-12 13:56 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ,பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி அழகேசன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் . சிறப்பு அழைப்பாளராக கரும்புலி குயிலி பேரவையின் மண்டல பொறுப்பாளர் அழகுமணி கலந்து கொண்டார். நிகழ்வில் ஒன்றிய, நகர ,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .இந்த கூட்டத்தில் ஈரோட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் ,வெல்லும் தமிழ்நாடு என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், திரளான தோழர்களை பங்கேற்க வைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது .மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட நிதி துணைச்செயலாளர் ராமகிருஷ்ணன் , தொகுதி பொறுப்பாளர்கள் பிரகாஷ், சுரேஷ் ,கார்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் நரேந்திரன், மாவட்ட துணை ஊடக பிரிவு செயலாளர் ஜீவா ,குமாரபாளையம் தொகுதி துணை செயலாளர் பெருமாள் ,ஒன்றிய ஊடகப் பிரிவு செயலாளர் கோகுல், பாதரை கிளைச் செயலாளர் சுரேஷ் ,உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக பாதரை கிளைச் செயலாளர் தோழர் சுரேஷ் நன்றி உரையாற்றினார்..

Similar News