பேராவூரணியில் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" துவக்க விழா
துவக்க விழா;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சேதுசாலையில் உள்ள நியாய விலைக்கடையில், "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்" துவக்க விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. சென்னை தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், "முதலமைச்சரின தாயுமானவர் திட்டத்தை" துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேராவூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் வீடுதேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, 84 வயதைக் கடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ. பழனிவேலு, பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் அ.அப்துல் மஜீத், வே.கார்த்திகேயன், ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.