வருவாய்துறையினர் ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நேற்று ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2025-08-13 10:25 GMT
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மத்திய செயற்குழு முடிவின்படி, நமது வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் அதீதமான பணி நெருக்கடி களைதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, நேற்று ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நில எடுப்பு வட்டாச்சியர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மத்திய செயற்குழுவின் தீர்மானங்களை வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை செயலாளர், அரசு தலைமைச் செயலாளர், முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்லுதல், நமது வாழ்வாதார கோரிக்கைகள், கோப்புகளாக உருப்பெற்று, அரசின் தீவிர பரிசீலனையில் உள்ள நிலையில், அதனை நிர்பந்தித்து, விரைவுபடுத்தி அரசாணைகளாக மாற்ற வேண்டும், கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வட்டம் தோறும் கூடுதல் துணை வட்டாட்சியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், அதீதமான பணி நெருக்கடிகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களிலிருந்து சரியாக மாலை 4.45 மணிக்கு வெளியேறி, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் மற்றும் அலுவலகத்தில் எவருமில்லை என்ற நிலையை ஏற்படுத்தி,. முகாம் நடந்த இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முகாமில் பங்கேற்ற வருவாய்த்துறையினர் ஆர்.ஐ.க்கள் , புவனேஸ்வரி, ஜெகதீஷ்குமார், உள்ளிட்டவர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் வட்ட கிளை தலைவர் செந்தில்குமார், தேர்தல் துணை வட்டாச்சியர் செந்தில்குமார், வட்ட கிளை பொருளாளர் குமார், உறுப்பினர்கள் சவுந்திரவள்ளி, லாவண்யா, பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News