தஞ்சாவூர் மாநகரில், கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை 

வாலிபர் சங்கம்;

Update: 2025-08-13 16:08 GMT
தஞ்சாவூர் மாநகரில், அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுகிறது. மாநகரில் இயங்கி வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் படியில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது. பல பேருந்து நிறுத்தங்களில், பயணிகள் காத்திருந்தாலும் பேருந்துகள் நிற்காமல் செல்கிறது.  ஆகவே, உடனடியாக தஞ்சை மாநகரில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். இதேபோல், சீனிவாசபுரம் பகுதிக்கு தேவையான அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகரத் தலைவர் நாகராஜ் தலைமையில், தஞ்சை நகர அரசுப் பேருந்து பணிமனை அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.  இதில், வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் அர்ஜுன், மாநகரக் குழு நிர்வாகிகள் வினோத், வினித், அஜய், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News