ஸ்ரீவில்லிபுத்தூர் கொலை வழக்கில் ஆயுதப்படை காவலருக்கு ஆயுள் தண்டனை... அலைபேசியில் குரல் மாற்றி பேசியதால் வந்த விபரீதத்தால் கொலை நடந்ததாக ஊர்ஜிதம் ....*
ஸ்ரீவில்லிபுத்தூர் கொலை வழக்கில் ஆயுதப்படை காவலருக்கு ஆயுள் தண்டனை... அலைபேசியில் குரல் மாற்றி பேசியதால் வந்த விபரீதத்தால் கொலை நடந்ததாக ஊர்ஜிதம் ....*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொலை வழக்கில் ஆயுதப்படை காவலருக்கு ஆயுள் தண்டனை... அலைபேசியில் குரல் மாற்றி பேசியதால் வந்த விபரீதத்தால் கொலை நடந்ததாக ஊர்ஜிதம் .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயுதப்படை போலீஸ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணாம்பேட்டை சேர்ந்த காவலர் கண்ணன் எண்ணூரில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய சமயங்களில் அவருடைய அலைபேசிக்கு பெண் ஒருவர் பேசி தனது காதலை தெரியப்படுத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த பெண் கண்ணனுடைய ஊரைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த கண்ணன் அவரை பார்க்க சென்றபோது பெண் குரலில் பேசியவர் அய்யனார் என்ற கல்லூரி மாணவன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மனமுடைந்த கண்ணன் குரலை வைத்து தான் மனமார காதலித்தது ஒரு ஆண் தானா? என்ற விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் தன்னை ஏமாற்றியது ஒரு ஆண் என்பதை ஏற்க முடியாமல் தனது நண்பர்களிடம் தான் ஏமாற்றப்பட்டு உள்ளதாக சொன்னதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற கண்ணன் தனது நண்பர்களுடன் தனது ஏமாற்றத்திற்கு காரணமாக அய்யனாரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கல்லூரி மாணவன் அய்யனாரை கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படை காவலர் கண்ணன் உட்பட அவரது நண்பர்களான டென்சிங் என்ற தமிழரசன், விஜயக்குமார், தமிழரசன் என்ற தமிழ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி T.v.மணி தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். காவலர் ஒருவரே கல்லூரி மாணவரை கொலை செய்த இவ் வழக்கு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.