திமுக ஆட்சியின் அவலங்களையும்,அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் அவர்களிடம் கொட்டி தீர்த்த கிராம மக்கள்.,
திமுக ஆட்சியின் அவலங்களையும்,அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் அவர்களிடம் கொட்டி தீர்த்த கிராம மக்கள்., பொதுமக்களிடம் சேர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் போராட தயாராக உள்ளதாக பேச்சு...*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுதந்திரதின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக ஆட்சியின் அவலங்களையும்,அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் அவர்களிடம் கொட்டி தீர்த்த கிராம மக்கள்., பொதுமக்களிடம் சேர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் போராட தயாராக உள்ளதாக பேச்சு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், என்.சண்முகசுந்தராபுரம், ஆண்டாள்புரம், சத்யாநகர், மாலைப்பட்டி,ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அண்ணாநகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துதுறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜிடம் திமுக ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வரும் அவலங்களையும் அரசு அதிகாரிகளின் அலட்சியங்களையும் சுட்டிக்காட்டி பேசினர். என்.சண்முகசுந்தராபுரம், இந்திராநகர் பி காலணியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தங்களது ஆதார் கார்டு, குடும்ப அட்டையை, வாக்காளர் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க சென்றும் போராட்டம் நடத்தியும் ஸ்டாலின் அரசு செவி சாய்க்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். வரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் மதுரை உயர்நீதிமன்றத்தில் தங்களது குடும்ப அட்டை,ஆதார் கார்டு, வாக களார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார் மேலும் அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்தால் கிராம மக்களிடம் சேர்ந்து அதிமுக எம்எல்ஏவாகிய தானும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று ஸ்டாலின் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.