நெல்லையில் வருகின்ற 22ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் மாநாட்டிற்கு நெல்லை மாநகர காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நெல்லை மாநகர காவல்துறை இன்று (ஆகஸ்ட் 19) மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் பேனர் வைப்பதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளனர்.