கவுன்சிலரிடம் மனு அளித்த சங்கத்தினர்
52வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலைய்யா;
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்குட்பட்ட ஏ.கே கார்டன் பகுதியில் வாறுகால் அமைப்பதற்கும், பூங்கா பராமரிப்பு பணிக்கும் மாமன்ற உறுப்பினர் நித்திய பாலைய்யாவிடம் இன்று (ஆகஸ்ட் 19) ஏ.கே கார்டன் நலச்சங்க தலைவர் கமாலுதீன் கோரிக்கை மனு அளித்தார்.மனுவை பெற்று கொண்ட மாமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்த நிகழ்வின்போது சங்க இணை செயலாளரும் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவருமான கனி உடன் இருந்தார்.