திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாங்குநேரி மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக வர்கீஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 22) புதிய அமைப்பாளர் வர்கீஸ் நாங்குநேரி மேற்கு திமுக செயலாளர் ஆர்.எஸ்.சுடலை கண்ணை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்று ஆலோசனை பெற்றார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.