கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
எரியோடு அருகே சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்;
திண்டுக்கல், மாரம்பாடி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் உறவினரான அந்தோணிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் செல்வகுமார்(34) என்பவரை எரியோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் எரியோடு காவல் நிலைய போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள், செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.