புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான்

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான்;

Update: 2025-08-23 08:20 GMT
திண்டுக்கல், டட்லி பள்ளி மைதானத்தில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு "வாருங்கள் ஓடுவோம் வாசிப்பை நோக்கி!" என்ற குறிக்கோளுடன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி ட்டலி பள்ளி மைதானத்தில் இருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை நடைபெற்றது. இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீ-சர்ட், தொப்பி மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மொத்தம் 4 பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News