ரோல்பால் போட்டியில் சாம்பியன்: அணிக்கு பாராட்டு விழா
ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா;
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிலையில், வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட அணி மாணவ, மாணவிகளுக்கு சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணைத் தலைவரும், சா்வதேச நடுவருமான பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்கச் செயலா் எம்.பி.சுப்பிரமணியம், பயிற்சியாளா்கள் தங்கலட்சுமி ஆகியோா் கலந்த கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி, பரிசுகள் வழங்கினா். நிகழ்ச்சியில் பயிற்சியாளா்கள் சக்திவேல், கலையரசன், கல்யாண், ராஜதுரை, மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.