சாலையில் நடமாடும் காட்டுமாடினால் பொதுமக்கள் அச்சம்
பண்ணைக்காடு பகுதியில் சாலையில் நடமாடும் காட்டுமாடினால் பொதுமக்கள் அச்சம்;
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு சரவணா தெரு ஊரல் பட்டி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் காட்டு மாடு நடமாட்டம் இருந்தது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதும் செல்வதும் சாதாரணமாக ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து காட்டு மாடினால் காட்டுப்பகுதியில் வேலை செய்யும் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டுமாடு வருவது நாள் அது பேராபத்தாக திகழும் என அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக விளங்குவது காட்டு மாடுகளினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு அதை தடுத்து நிறுத்திடும் வகையில் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.