அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் அஇ அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.;
திமுக ஒருமுறை ஆட்சி செய்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வராது வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார பயணக் கூட்டத்திற்கு வாக்காளர்களை அழைத்து வாருங்கள் என திண்டுக்கல்லில் நடைபெற்ற தொகுதி ஆலோசனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு. திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் அஇ அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், தென்னம்பட்டி, பழனிச்சாமி, பரமசிவம் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.