புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் திறப்பு

விருப்பாட்சியில் ரூ.8.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம்;

Update: 2025-08-25 19:41 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் ரூ.8.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருப்பாட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். மேலும், ஒட்டன்சத்திரம் முதல் கண்ணனூர் கே.சி பட்டி வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Similar News