ஓவிய போட்டி : மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

தூத்துக்குடி சிவன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது.;

Update: 2025-08-27 09:57 GMT
தூத்துக்குடி சிவன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தி பேரவை சார்பில் சிவன் கோவில் வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான விநாயகர் ஓவியம் வரையும் போட்டி மற்றும் விநாயகர் படத்திற்கு வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பக்தி பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News