ஆவுடையார் கோவில் இருந்து திருச்சிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் திருச்சியில் இருந்து ஆவுடையார் கோவிலுக்கு நேரடி நேரடி பேருந்து வசதி இல்லாததால் புதுக்கோட்டை அல்லது அறந்தாங்கி வந்து அங்கிருந்து ஆவுடையார் கோவில் வரும் நிலை உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர பொதுமக்களும் வணிகர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.