கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா சங்கிலி கருப்பண்ணசாமி திருக்கோவிலில் 3-ம் ஆண்டு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது.
கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா சங்கிலி கருப்பண்ணசாமி திருக்கோவிலில் 3-ம் ஆண்டு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது.;
கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா சங்கிலி கருப்பண்ணசாமி திருக்கோவிலில் 3-ம் ஆண்டு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா காருடையாம்பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. சங்கிலி கருப்பண்ணசாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்துவதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் வளாகத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர். அப்போது கோவில் பூசாரி ஆணிகள் பதித்த காலணியை அணிந்து வாயில் சுருட்டை பற்ற வைத்து புகைத்தவாறு கருப்பண்ண சுவாமியை போல இசைக்கப்பட்ட மேளதாளத்திற்கு ஏற்றார் போல் நடனம் ஆடி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் பக்தி பரவசத்தோடு சங்கிலி கருப்பண்ண சுவாமியை வணங்கி தங்கள் வாழ்வெல்லாம் சிறப்பாக அமைய வேண்டிக் கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமும் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக அன்னதானமும் வழங்கினர்.