பாகலூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி வடமாநில வாலிபர் பலி.
பாகலூர் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி வடமாநில வாலிபர் பலி.;
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்குமார் (23) பாகலூர் அருகே தாசரப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவரும் நண்பர் சஞ்சீத் (29) என்பவரும் கடந்த 31-ஆத் தேதி அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர்-மாலூர் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சந்தீப்குமார் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சஞ்சீதை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.