அஞ்செட்டி அருகே, மரத்தில் கார் மோதி ஒருவர் பலி.

அஞ்செட்டி அருகே, மரத்தில் கார் மோதி ஒருவர் பலி.;

Update: 2025-09-04 00:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கக்கதாசம் சாந்தி நகரை சேர்ந்தவர் வரதராஜ் (53) ரமேஷ்(53) சிவக்குமார்(30) அஸ்வத்(45) ஆகிய 4 பேரும் நேற்று ஒகேனக்கல் சென்று விட்டு மீண்டும் தேன்கனிக்கோட்டைக்கு காரில் வந்த போது ஒகேனக்கல்-நாட்றாம் பாளையம் சாலையில் உள்ள கத்திரிப்பள்ளம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியதில் காரின் முன்பக்க சீட்டில் இருந்த வரதராஜ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News