ஒசூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
ஒசூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் அருகேயுள்ள அச்செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (எ) சுபாஷ் (29) ஆட்டோ டிரைவரான. இவர் கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சீனி வாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கீர்த்தனா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் சம்வம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மத்திகிரி போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.