கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்றவர் கைது.
கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்றவர் கைது.;
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாப்பாரப்பட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்ததில் அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசாரி அவரிடம் விசாரித்தில் அவர் பழையபேட்டை நல்லதம்பி செட்டித்தெருவை சேர்ந்த சண்முகம் (19) என்பதும் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.