கிருஷ்ணகிரியில் அலுவலர்களுடன் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் ஆய்வு கூட்டம்.

கிருஷ்ணகிரியில் அலுவலர்களுடன் உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர் ஆய்வு கூட்டம்.;

Update: 2025-09-07 02:21 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11.09.2025 மற்றும் 12.09.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், எம்.எல்.ஏ.கள் தே.மதியழகன் (பர்கூர்) ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைகுறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்

Similar News