டிரான்ஸ்பார்மர்களை உடைத்து காப்பர் கம்பி, ஆயில் திருட்டு.

டிரான்ஸ்பார்மர்களை உடைத்து காப்பர் கம்பி, ஆயில் திருட்டு.;

Update: 2025-09-07 02:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகயுள்ள காடுலக்கசந்திரம் மற்றும் அரசகுப்பம் கிராமத்தில் ஆகிய உள்ளிட்ட டிரான்ஸ்பார்மர் என இரண்டு இடங்களில் உள்ள டிரான்ஸ் பார்மர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த காப்பர் கம்பிகள், ஆயில் ஆகியவை திருடப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். அதே போல் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் உள்ள தனியார் லே அவுட்ல் உள்ள டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் மதிப் புள்ள காப்பர் கம்பிகள், ஆயிலை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News