புதிய பேருந்து நிழற்குடை திறப்பு!
புதிய பேருந்து நிழற்குடையை, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், இன்று திறந்து வைத்தார்.;
வேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிழற்குடையை, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், இன்று (செப்.15) திறந்து வைத்தார். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.