கரூர்- முப்பெரும் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் திடீரென அகற்றம்.
கரூர்- முப்பெரும் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் திடீரென அகற்றம்.;
கரூர்- முப்பெரும் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் திடீரென அகற்றம். கரூர் அடுத்த கோடங்கிபட்டியில் இன்று மாலை திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்காக நகர் எங்கும் பிளக்ஸ் மற்றும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் இதுபோன்று அமைக்கப்பட்ட போது கொடிக்கம்பம் விழுந்து ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் கொடிக்கம்பங்களை சாலை ஓரத்தில் நடக்க கூடாது என உத்தரவிட்டது. சமீபத்தில் பாதுகாப்பு இல்லாத வகையில் பேனர்கள் அமைக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் திமுக கட்சி நிர்வாகிகள் விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக அமைக்கப்பட்ட பேனர்களை நேற்று இரவு கருவூருக்கு வந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேனர்களை பார்த்த பிறகு அனைத்தையும் அகற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான பேனர்கள் அகற்றப்பட்டது. அதேசமயம் சாயும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களால் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.