சேலத்தில் சிக்னலிங் தொடர்பான பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.

சேலத்தில் சிக்னலிங் தொடர்பான பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்.;

Update: 2025-09-18 14:34 GMT
சேலத்தில் சிக்னலிங் தொடர்பான பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம். சேலம் ரயில் வழித்தடத்தில் சிக்னல் தொடர்பான பணிகள் நடைபெறுவதால் கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்       மயிலாடுதுறையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16811 மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், 20.09.25 அன்று மல்லூர் ரயில் நிலையத்தில் குறுகிய நிறுத்தப்படும். இந்த ரயில் மயிலாடுதுறையிலிருந்து மல்லூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அன்று மல்லூரில் இருந்து சேலம் வரை இயக்கப்படாது. இதே போல சேலம் ஜங்ஷனிலிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16812 சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், 20.09.25 அன்று மல்லூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சேலம் ஜங்ஷனிலிருந்து மல்லூருக்கு இயக்கப்படாது. அன்று மல்லூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News