கரூர் மது போதையில் விஷம் குடித்த கூலி தொழிலாளி உயிரிழப்பு.
கரூர் மது போதையில் விஷம் குடித்த கூலி தொழிலாளி உயிரிழப்பு.;
கரூர் மது போதையில் விஷம் குடித்த கூலி தொழிலாளி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட சடையகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் வயது 51. ஞாயிற்றுக்கிழமை அன்று மது போதையில் இருந்த காளியப்பன் மாலை 4 மணியளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காளியப்பனின் மனைவி சரண்யா வயது 35 என்பவர் அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.