புதுக்கோட்டை பஸ் ஸ்டாப்-முந்தி சென்ற டாஸ் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த லாரி மோதி விபத்து.

புதுக்கோட்டை பஸ் ஸ்டாப்-முந்தி சென்ற டாஸ் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த லாரி மோதி விபத்து.;

Update: 2025-09-19 02:44 GMT
புதுக்கோட்டை பஸ் ஸ்டாப்-முந்தி சென்ற டாஸ் லாரி திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த லாரி மோதி விபத்து. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சுருட்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த் வயது 30 லாரி டிரைவர். இவர் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 2 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் மாயனூர் அருகே உள்ள புதுக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே அவரது லாரியை ஓட்டி சென்றார். அப்போது அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் பகுதியைச் சேர்ந்த வினோத் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாரஸ் லாரி சந்திரகாந்த் ஓட்டிச் சென்ற லாரியை முந்தி சென்று திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக்கிட்டதல் சந்திரகாந்த் ஓட்டிய லாரி வினோத் டாரஸ் லாரியின் பின்னல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சந்திரகாந்த் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த சந்திரகாந்தின் மனைவி சின்ன பொண்ணு வயது 28 என்பவர் அளித்த புகாரில் விபத்து ஏற்பட காரணமான வினோத் மீது மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News