கரூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து.
கரூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து.;
கரூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து. கரூர் மாவட்டம் சுக்காலியூர் அருகே பொதியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு வயது 34. இவர் வியாழக்கிழமை காலை 9:45- மணியளவில் திண்டுக்கல்- கரூர் சர்வீஸ் சாலையில் தனியார் ஓட்டல் அருகே சென்றபோது அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு லாரி சந்துரு ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சந்துருவின் மனைவி நித்யா வயது 30 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் மாநகர காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.