தடா கோவில் பிரிவில் லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
தடா கோவில் பிரிவில் லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;
தடா கோவில் பிரிவில் லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது துரைப்பா.டாட்டா ஏஸ் ஓட்டுநர். இதேபோல கன்னியாகுமரி மாவட்டம் சாத்தான் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது 57. இவர்கள் இருவரும் டாட்டா ஏஸ் வாகனத்தில் வியாழக்கிழமை அதிகாலை 2:10 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் தடா கோவில் பிரிவு அருகே சென்றனர். அப்போது சாலை ஓரம் நின்றிருந்த லாரியை கவனிக்காமல் முகமது துரையப்பா ஓட்டிய டாட்டா ஏஸ் வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டாட்டா ஏஸ்-சில் உடன் பயணித்த ஜெகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக ஜெகநாதன் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் முகமது துரையப்பா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.