வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update: 2025-09-20 14:33 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று (செப். 20) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூலவர் பெருமாளுக்குப் பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News