மண்டித் தெருவில் சென்டர் மீடியன் அகற்றும் பணி ஆய்வு!
சென்டர் மீடியன் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
வேலூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மண்டித் தெருவில், சென்டர் மீடியன் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, இடிக்கப்பட்ட கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்