லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாமி வீதி உலா!

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று நரசிம்ம சுவாமி வீதி உலா நடைபெற்றது.;

Update: 2025-09-20 14:42 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (செப். 20) நரசிம்ம சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் சார்பில் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News